Skip to main content

வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதியதொரு அம்சம்

Aug 11, 2023 141 views Posted By : YarlSri TV
Image

வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதியதொரு அம்சம் 

வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சம்  இந்த தளத்தில் வெளிவந்துள்ளது.



                              அதாவது வாட்ஸ்அப் செயலியில் வீடியோகால்(Video call) பேசும் போது உங்கள் சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.   இந்த அம்சம் ஸ்கிரீன் ஷேர் (screen share) என அழைக்கப்படுகின்றது.   அதாவது ஒரு நபருடைய திரையில் என்ன தோன்றுகிறதோ அதை மற்றொரு நபர் அவதானிக்க முடியும்.



      இந்த புதிய அம்சத்தினை குறிப்பாக  மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.வீடியோகால் பேசும் போது  வாட்ஸ்அப் பயனர்கள்  ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம்.  ஷேர் செய்யத் துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



  போன்களில் வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தைப் பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது என தெரிவிக்கப்படுகின்றது.  அதேபோல் இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை