Skip to main content

பயண பொதியிலிருந்து பெண்ணின் தலை மீட்பு

Sep 17, 2023 33 views Posted By : YarlSri TV
Image

பயண பொதியிலிருந்து பெண்ணின் தலை மீட்பு 

ஹேவாஹெட்ட - ருக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, வயோதிபப் பெண் ஒருவரினுடையது என சந்தேகிக்கப்படும் சிதைவடைந்த தலையொன்று பயணப் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.



அதேவேளை குறித்த பயணப்பைக்கு அருகிலிருந்து கையின் ஒரு பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஹேவாஹெட்ட - ருக்வூட் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடந்த 6ஆம் திகதி ஹங்குரன்கெத்த காவல்நிலையத்துக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதலின்போது, மத்துரட்ட – ஓகந்தகல மலை பகுதியிலிருந்து தலை மற்றும் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.



பின்னர் குறித்த சடலம் மீதான பிரேத பரிசோதனைகளில், சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.



தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர், குறித்த சடலத்தினுடையதென சந்தேகிக்கப்படும் தலை மற்றும் இடது கை சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை