Skip to main content

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை

Sep 26, 2023 28 views Posted By : YarlSri TV
Image

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை 

இறக்குமதி செய்யப்பட்ட கொவிட் 19 பைசர் தடுப்பூசிகளில் 13 சதவீதமானவையே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 80 சதவீதமானவை காலவாதியாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.



கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட14.05 மில்லியன் பைசர் (pfizer) தடுப்பூசிகளில் சுமார் 12 மில்லியனை அழிக்கவேண்டியுள்ளது என தெரிவித்தார்.



கொவிட் 19 பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் தடுப்பூசி செலுத்துவதால் வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக மக்களிடையே பரவிய கருத்துக்களால் தடுப்பூசி செலுத்துவது கைவிடப்படப்பட்டுள்ளது.



எனவே இவ்வாறு தடுப்பூசிகள் மீதமிருப்பதாகவும் காலவாதியாகாமல் இருக்கும் தடுப்பூசிகளை அயல் நாடுகளுக்கு வழங்குவது குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

15 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை