மாத்திரை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!
Mar 13, 2024 29 views Posted By : YarlSri TV
மாத்திரை தொண்டையில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!
மஹியங்கனையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கிய நிலையில் இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி (11) உயிரிழந்துள்ளார்.
தாய் வெளிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது
விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago