Skip to main content

தடுப்பு மருந்து கோவிஷீல்ட்.. தமிழகத்தில் பரிசோதிக்க.. முதல்வர் எடப்பாடி அனுமதி!

Sep 13, 2020 280 views Posted By : YarlSri TV
Image

தடுப்பு மருந்து கோவிஷீல்ட்.. தமிழகத்தில் பரிசோதிக்க.. முதல்வர் எடப்பாடி அனுமதி! 

சென்னை ராஜீவ் காந்தி, போரூர் ராமச்சந்திர மருத்துவமனைகளில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு மனித பரிசோதனைக்கு உட்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தமிழக மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.



ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து கண்டுபிடித்து இருக்கும் கொரோன தடுப்பு மருந்தான கோவிஷீல்டு இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தப் பரிசோதனையை ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் இணைந்து புனாவில் இருக்கும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு சீரம் நிறுவனத்துக்கு ஆக்ஸ்போர்டு அனுமதி அளித்து இருந்தது. இந்தியாவிலும் இந்த மருந்தை சீரம் இன்ஸ்ட்டிடியூட் தயாரிக்க இருக்கிறது. இந்தியாவில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.



இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைக்கு 120 முதல் 150 பேர் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அண்ணா சாலையில் இருக்கும் இயக்குனர் அலுவலகத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இந்த பரிசோதனையை கண்காணிப்பார்கள். இத்துடன் இந்த திட்டத்துக்கு முதன்மை கண்காணிப்பாளராக பொதுசுகாதார இயக்குனர் டாக்டர் டிஎஸ் செல்வவிநாயகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



இதுதவிர சென்னை புறநகரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதுகுறித்து ராமச்சாந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் எஸ்பி தியாகராஜன் அளித்திருக்கும் பேட்டியில், ''எங்களது மருத்துவமனையில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு கொரோனா தடுப்பு மருத்துகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறைந்தது 120 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து செலுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.



ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து ஏற்கனவே பிரிட்டனில் மனித பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு நல்ல பாதுகாப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த மருந்து இந்தியாவில் 17 இடங்களில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்த மருந்து மனித உடலில் செலுத்திய 14வது நாளில் டி செல்கள் தூண்டப்படும். 28வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். டி செல் என்பது வெள்ளை ரத்த அணுக்கள். அவை கொரோனா வைரஸ் தாக்கிய செல்களை அழித்துவிடும். நோய் எதிர்ப்பு என்பது புரோட்டீன் மூலக்கூறுகளாகும். இவை வைரஸை சமன்படுத்தும். துவக்கத்தில் செல்களை வைரஸ் பாதிக்காமல் பாதுகாக்கப்படும்.



நாடு முழுவதும் இந்த ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு மனித பரிசோதனைக்கு 1600 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளனர். சண்டிகரில் இருக்கும் மருத்துவ முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டெல்லி எய்ம்ஸ், புனேவில் இருக்கும் ஏபிஜெ மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் இருக்கும் ராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூரில் இருக்கும் ஜெஎஸ்எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி ஆகியவற்றில் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து மனித பரிசோதனை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் செய்யப்படவுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை