Skip to main content

சட்டசபையில் ஜெயலலிதா விட்ட சாபம் அப்படியே பலிக்கிறதா? தன் இல்லத்தில் புன்னகைக்கும் விஜயகாந்த்..!

Feb 04, 2022 73 views Posted By : YarlSri TV
Image

சட்டசபையில் ஜெயலலிதா விட்ட சாபம் அப்படியே பலிக்கிறதா? தன் இல்லத்தில் புன்னகைக்கும் விஜயகாந்த்..! 

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்கு முகம் மட்டும்தான். இதை சரித்திரம் சொல்லும்’ என்று ஜெயலலிதா அன்று கூறினார்.



கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி மாஸான வெற்றி பெற்றது.



சட்டசபையில் தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு, எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. கம்பீரமாக அமர்ந்தது. ஆனால், இது நெடுநாள் நீடிக்கவில்லை. சட்டசபையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையில் பெரும் யுத்தமே வெடித்துச் சிதறியது.



அப்போது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ‘தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்கு முகம் மட்டும்தான். இதை சரித்திரம் சொல்லும்.’ என்று ஆவேசமாக சொல்லி அமர்ந்தார்.



அவர் சொன்னபடியே தே.மு.தி.க. உட்கார்ந்தது, சரிந்தது, படுத்தே விட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் மிக பெரிய கட்சியாக இருந்தது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்.



அதற்கு ஒரே காரணம் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் விஜயகாந்த் தான். ‘கருப்பு எம்.ஜி.ஆர். மட்டுமல்ல இரண்டாம் எம்.ஜி.ஆரும் அவரே’ என்று புகழுமளவுக்கு வள்ளல் குணம் கொண்டவர்.ஆனால் உடல் சுகவீனமடைந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக வீக் ஆக ஆக, அவரது கட்சியும் தேய்ந்து, கரைந்து, இன்று மிக பலஹீனமான நிலையில் உள்ளது.





விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அக்கட்சியை கையிலெடுத்த பிரேமலதா, தானும் ஜெயலலிதா போல் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.



ஆனால், கூட்டணியை முடிவு செய்வதில் அவரும் அவரது சகோதரர் சுதீஷும் நடந்து கொண்ட விதங்கள் மிகப்பெரிய விமர்சனங்களை உருவாக்கின. தற்போது, தமிழகமே எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்.



234 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் வெறும் 4 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வே தனித்து களம் காண்கிறது. ஆனால் வெறும் 6 வருடங்களுக்கு முன்பு அதே சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க.வோ இன்று கூட்டணிக்கு தினகரன் கூட அழைக்காத நிலையில் உள்ளது.



பிரேமலதாவும், சுதீஷும் மிகப்பெரிய மன வேதனையில் உள்ளனர். ஆனால்… என்ன நடக்கிறது என்ற விவரம் கூட புரிந்து கொள்ள இயலாத நிலையில் கேப்டன் சிறு குழந்தை போல் சிரித்தபடி அமர்ந்துள்ளார் தன் இல்லத்தில். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை