Skip to main content

விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் - அமெரிக்கா அறிவிப்பு!

Feb 28, 2022 83 views Posted By : YarlSri TV
Image

விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் - அமெரிக்கா அறிவிப்பு! 

ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. 



உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.



 உக்ரைனுக்கு உதவும் வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த ஏவுகணைகள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஏவுகணைகளை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



இதனிடையே, உக்ரைனுக்கு 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் ராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை வழங்குவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. 



இதற்காக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூவிற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய விமானங்களுக்கு அனுமதி மறுத்த போர்ச்சுல் நாட்டிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை