Skip to main content

இனி வாழ்நாளில் எப்பவும் சர்க்கரை நோய் வரக்கூடாதா....அடிக்கடி இந்த ஒரு பானத்தை குடிங்க போதும்!

Mar 09, 2022 64 views Posted By : YarlSri TV
Image

இனி வாழ்நாளில் எப்பவும் சர்க்கரை நோய் வரக்கூடாதா....அடிக்கடி இந்த ஒரு பானத்தை குடிங்க போதும்! 

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர் மிகச்சிறந்த தீர்வாக இருந்தாலும், சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால் ஒருசில மருத்துவ குணம் நிறைந்த பானங்களைக் குடிக்க வேண்டும்.



கீழே சர்க்கரை நோய் வராமல் இருக்க குடிக்க வேண்டிய பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.



அவற்றில் ஒன்றை தினமும் பருகுங்கள்



பாகற்காய் ஜூஸ்



 பாகற்காய் ஜூஸ் இன்சுலினை செயல்படச் செய்கிறது. சர்க்கரை போதுமான அளவு பயன்படுத்தப்படும் போது, அது கொழுப்பாக மாற்றப்படாது மற்றும் இது உடல் எடையையும் குறைக்க உதவும். மேலும் பாகற்காய் ஜூஸில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சாரன்டின் என்னும் செயலில் உள்ள பொருள் உள்ளது.



அதிலும் ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக்க மற்றும் நிர்வகிக்க பெரிதும் உதவும்.



வெந்தய நீர்



தினமும் பத்து கிராம் வெந்தய விதையை சுடுநீரில் ஊற வைத்து, நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.



வெந்தய நீருக்கு சர்க்கரை நோயாளியின் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் உள்ளது.



வெண்டைக்காய் நீர்



வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு சிறந்த காய்கறியாகும். அதுவும் வெண்டைக்காய் நீர் குடிப்பது மிகவும் நல்லது. அதற்கு 5 வெண்டைக்காயை நன்கு கழுவி, அதன் முனைகளை நீக்கிவிட்டு, இரண்டாக வெட்டி, ஒரு நீளமான டம்ளரில் போட்டு, அதில் நீரை நிரப்பி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை