Skip to main content

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள்

May 20, 2022 88 views Posted By : YarlSri TV
Image

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் 

சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.



இன்று ஏராளமானோருக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. ஆனால் பலருக்கும் நமக்கு இருப்பது சைனஸ் என்று சரியாக தெரிவதில்லை.பொதுவாக சைனஸ் பிரச்சனையை, சாதாரண சளி இருமல் என்று சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.



இது குறித்து விரிவாக பார்க்கலாம்.



ஆபத்தான சாதாரன அறிகுறி



சைனஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் சளிக்கான அறிகுறிகள் என இரண்டும் ஒரே மாதிரி இருக்கும்.



அதில் மூக்கடைப்பு, லேசான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, மிகுதியான சோர்வு மற்றும் உடல்நலம் சரியில்லாதது போன்று உணர்வு இருக்கும்.



ஒருவருக்கு சாதாரண சளி என்றால், இதற்கான அறிகுறிகள் 3-5 நாட்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் ஒரு வாரத்திற்கும் மேல் ஒருவருக்கு சளி நீடித்திருந்தால், அவர்களுக்கு சைனஸ் தொற்றுகள் உள்ளது என்று அர்த்தம்.



சைனஸ் என்றால் என்ன?



மூக்கைச் சுற்றி பக்கத்திற்கு 4 என்று இரண்டு பக்கமும் சேர்த்து 8 காற்றுப்பைகள் உண்டு. கண்ணுக்கும் மூக்கும் இடைப்பட்ட கன்னம், மூக்கு, நெற்றி போன்றவை இணையும் இடத்தில் அமைந்திருக்கும் காற்றுபைகள் நாம் சுவாசிக்கும் காற்றை சுவாச மண்டலத்துக்கு எடுத்துசெல்லும் இந்த காற்றுபைகள் தான் சைனஸ் என்று அழைக்கிறோம்.  



சைனஸ் அறைகளில் ஏதாவது ஒரு அறையில் நீரோ சளியோ தங்கிய பிறகு அந்த அறைகளின் வாசல் அடைக்கப்படுகிறது.



இதுதான் சைனஸ் பாதிப்பு என்று சொல்லப்படுகிறது



நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு சரியான வெப்பநிலையில் எடுத்டு செல்ல உதவுவது இந்த அறைகள் தான்.



​இரண்டு வகை சைனஸ் 



சைனஸ் பிரச்சனை இரண்டு வகைப்படும். ஒன்று குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். இது அக்யூட் ரியோ சைனஸைட்டீஸ் என்று அழைக்கப்படும்.



இந்த சைனஸ் பாதிப்பு 2 முதல் 3 வாரங்கள் வரை மட்டுமே இருக்கும். இவை சைனஸ் தொந்தரவுகளை உருவாக்கி பிறகு படிப்படியாக குறைந்துவிடும்.



இவை வைரஸ் தொற்றால் உருவாகக்கூடியவை.



மற்றொன்று க்ரானிக் ரியோ சைனஸைட்டீஸ் எனப்படும் இரண்டாவது வகை.



இவை 12 வாரங்கள் வரை நீடிக்ககூடியது. இவர்கள் தான் சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் என்று சொல்லகூடியவர்கள். இவர்களுக்கு எப்போதும் தூசு, புகை, பூ, காற்றில் மாசு போன்றவை அலர்ஜிதான்.



பொதுவான அறிகுறிகள் 



முகத்தில் வலி - சாதாரண சளிக்கும், சைனஸ் தொற்றிற்கும் உள்ள வேறுபாட்டை அறியும் ஒரு மிகச்சிறந்த வழி முகத்தில் வலியுடன், ஒருவித அழுத்தத்தை உணரக்கூடும்.



மூக்கைச் சுற்றிய பகுதிகளிலும், மேல் தாடை மற்றும் பற்கள், மற்றும் கண்களுக்கு இடையேயும் வலியை அனுபவிக்கக்கூடும்.



சைனஸ் சுரப்பிகளில் சளி தேங்குவதால் தான், முகத்தில் அழுத்தம் மற்றும் வலி ஏற்படுகிறது. சில சமயங்களில் சைனஸ் தொற்றுகள் தீவிரமாக இருக்கும் போது வலி இன்னும் கடுமையாக, தலையை சிறிது அசைத்தாலே வலியை சந்திக்கக்கூடும்.



மஞ்சள் நிற சளி -  சைனஸ் பிரச்சனையாக இருப்பின், மூக்கில் இருந்து சளி மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலேயோ வெளியேறும். இதேப் போன்று வாயின் வழியாகவும் சளி வெளியேறும். இதற்கு காரணம் சைனஸ் வைரஸ் தான்.



இம்மாதிரி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.  



கடுமையான இருமல் - இருமலானது நீண்ட நேரம் கடுமையாக இருந்தால், சைனஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குறிப்பாக இரவு நேரத்தில் இருமல் வருவதோடு, தூங்கும் நிலையும் சைனஸை பாதிக்கும். அதுவும் ஒருவர் மல்லாக்க படுக்கும் போது, நாசித்துளையில் உள்ள சளி அப்படியே மீண்டும் தொண்டைக்கு சென்றுவிடும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை