Skip to main content

இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ்

Oct 08, 2022 80 views Posted By : YarlSri TV
Image

இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ் 

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.



கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான அந்நிய செலாவணியில் பங்களிக்கும் நேரத்தில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் அனுப்பும் சூழலில் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.



மேலும் ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பது பொதுவான மரபு எனவும், எனினும் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள்கூட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறு ஏன் நடக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றும் ஆணித்தரமான வாக்குறுதிகளை நாம் இலகுவாக எடுத்துக்கொண்டு அவற்றை மீறுவதே முக்கிய காரணம் என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை