Skip to main content

வெளியேறும் தகவல் தொழிநுட்ப பணியாளர்கள்!

Oct 14, 2022 246 views Posted By : YarlSri TV
Image

வெளியேறும் தகவல் தொழிநுட்ப பணியாளர்கள்! 

அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றுவோர் நாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளதாக இலங்கை கணனி தொழிற்நுட்ப சபையின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.



தகவல் தொழிநுட்பத்துறையில் பணம் சம்பாதிக்கும் பலர் இருக்கின்றனர். எனினும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தில் தமது பணத்தை முதலீடு செய்ய அவர்கள் விரும்பவில்லை.



தகவல் தொழிநுட்பத்துறையின் ஊடாக ஐந்து பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும். அதற்கு அரசாங்கத்தின் உதவிகள் அவசியம் எனவும் ஹெட்டிஹேவா கூறியுள்ளார்.



அதேவேளை தம்மிடம் அறவிடப்படும் வரி வருமானத்தை நாட்டின் கல்வி மற்றும் புதிய உற்பத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு தகவல் தொழிநுட்பத்துறையில் இருப்போர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



வரியை செலுத்த தமக்கு சில காலஅவகாசம் வழங்கினால் 30 வீத வரியை செலுத்துவதில் சிக்கல் இல்லை என இலங்கை கணனி தொழிநுட்ப சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் ஹெட்டிஹேவா மேலும் கூறியுள்ளார். 


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை