Skip to main content

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா....!!

Oct 15, 2022 53 views Posted By : YarlSri TV
Image

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா....!! 

சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எனவே சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியடையும்.



சிலருக்கு பசி உணர்வு குறைவாக இருக்கும். இவர்கள் சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும். சுண்டைக்காய்களை காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.



சுண்டைக்காய்களை குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.



எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டைக்காய் வற்றல் தூள்  2 சிட்டிகை அளவு 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும்.



பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும். மேலும் சுண்டக்காய் குழம்பு, வதக்கல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை