Skip to main content

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தமிழர் உயிரிழப்பு!

Aug 28, 2023 65 views Posted By : YarlSri TV
Image

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தமிழர் உயிரிழப்பு!  

தெல்லிப்பழையில் நேற்றையதினம் (26-08-2023)  மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். சோடா கொம்பனி வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான நாகராஜா சசிதரன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



யாழ். தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது.இதன்போது குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.



அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.



அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை