Skip to main content

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! உடனடியாக தகவல் தாருங்கள்...

Apr 08, 2023 72 views Posted By : YarlSri TV
Image

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! உடனடியாக தகவல் தாருங்கள்... 

சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.



இதனால், உணவு பொருட்களை உரிய முறையில் பார்த்து கொள்வனவு செய்யுமாறு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை, உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் உணவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.



விசேடமாக பண்டிகை காலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் மற்றும் அவற்றுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் ஆராயப்படும்.



இதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 3,200 அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.



இதன்போது முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றால் அவை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.



அதேநேரம் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெற்றால், அவற்றை 011 263 5675 என்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமக்கள் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும்.”என தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை