Skip to main content

இணையக்குற்றங்கள்: பின்னணியில் வெளிநாட்டவர்கள்..! பொலிஸார் எச்சரிக்கை

Nov 08, 2023 535 views Posted By : YarlSri TV
Image

இணையக்குற்றங்கள்: பின்னணியில் வெளிநாட்டவர்கள்..! பொலிஸார் எச்சரிக்கை 

 



இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை  அவர் குறிப்பிட்டுள்ளார். 



இணையக்குற்றங்களில் வெளிநாட்டவர்களது ஈடுபாடு அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  



அதன்படி,  ஒன்லைன் மூலமான நிதி மோசடி, தனி நபர்களின் தரவுகளைத் திருடுதல் மற்றும் இணைய வர்த்தக மோசடிகள், போன்ற குற்றங்களில்  சுமார் 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



பல தூதரகங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின்  அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 



மேலும், சில வெளிநாட்டு பிரஜைகள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பல மில்லியன் ரூபாவை இணையத்தின் ஊடாக மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கிடைத்திருக்கின்றன, 



 இவ்வாறான குற்றங்களைத் தடுத்து, இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை