Skip to main content

தல தோனியின் தீபாவளி ஷாப்பிங்!

Nov 12, 2023 27 views Posted By : YarlSri TV
Image

தல தோனியின் தீபாவளி ஷாப்பிங்! 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று எம்.எஸ். தோனி. இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக வலம் வந்தவர். மின்னல். வேக கீப்பிங், அதிரடி பேட்டிங் மற்றும் ஆட்டத்தை முடிக்கும் திறன் ஆகியவை இவரை தனித்துவமான பிளேயராக அடையாளம் காட்டியது.



சமூக ஊடகங்களில் இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடருகின்றனர். தோனிக்கு கிரிக்கெட்டை தவிர்த்து வேறொரு பிடித்த விஷயம் இருக்கிறது. இவருக்கு பைக், கார் என்றால் அவ்வளவு விருப்பம். சில சமயங்களில் தோனி கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லும் போது பைக்கில் செல்வதை பார்க்க முடியும்.



சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு விதவிமான பைக் மற்றும் கார்களை சேகரித்து வருகிறார். சிலர் அஞ்சல் தலைகளை சேகரிப்பது போல் இவர் வாகனங்களை சேகரித்து வருகிறார். முதல் முறையாக ஓட்டிய யமஹாஆர்டி 350 மாடல் பைக் கூட இன்றும் அவர் வீட்டில் உள்ளது.



ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் பைக், கார்களை சேகரித்து நிறுத்தி வைக்க தனியே குடோன் போன்ற ஒர்க்ஷாப் வைத்துள்ளார். தோனி எது செய்தாலும் உடனே வெளிச்சத்துக்கு வந்து விடும். இந்த வாகன கலெக்ஷனும் அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது வாகன ஆர்வலர்களும் தோனியை விரும்ப தொடங்கி விட்டனர். தோனி புதிதாக ஏதாவது பைக் அல்லது கார் வாங்கினால் அதை தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது இவர் புதிய customised Jawa 42 பாபர் பைக்கை தனது வாகன கலெக்ஷனில் சேர்த்துள்ளார்.



ஜாவா பைக் பொதுவாக கொஞ்சம் காஸ்டலியாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் ஜாவா 42 பாபர் பைக்கின் ஆரம்ப விலை ரூ.2,25,000 (ஷோ ரூமுக்கு முந்தைய விலை). தோனி வைத்திருக்கும் customised ஜாவா 42 பாபர் அதனை காட்டிலும் விலை அதிகமாக இருக்கும். தோனியின் புதிய ஜாவா 42 பாபர் பைக்கின் நிறம் தனித்துவமான பச்சை கலர். பெட்ரோல் டேங்கில் கோல்டு கலரில் பின்ஸ்டிரிப்ஸ் இடம் பிடித்துள்ளது. பைக்கில் இருக்கும் ஒற்றை இருக்கை அமைப்பு அந்த அந்த வண்டிக்கு கூடுதல் கவர்ச்சியை அளிக்கிறது. இந்த பைக்கானது 29.5 பி.எச்.பி. பவரையும், 32.74 உச்ச டார்க்கையும் உற்பத்தி செய்யும் 334 சி.சி. சிங்கின் சிலிண்டர்,



லிக்யுட் கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. என்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டுள்ளது. 18 இன்ச் முன் சக்கரம் மற்றும் 17 இன்ச் பின்புற சக்கரத்துடன் ஒரு நிலையான பாதுகாப்பு அம்சமாக இரட்டை சேனல் ABS உடன் வருகிறது. தோனி சேகரித்து வைத்திருக்கும் பைக், கார்களின் மதிப்பே சில கோடிகள் இருக்கும் என கூறப்படுகிறது.



 



 



 



 



 



 



 



 



 



 



 



 



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை