Skip to main content

முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்

Dec 15, 2023 23 views Posted By : YarlSri TV
Image

முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்  

வேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பெண்ணொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்து இடம்பெற்ற போது சாரதியும் அவரது இரண்டு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும், விபத்தில் மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து அருகில் உள்ள கடையின் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.எனத்தெரியவருகின்றது 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை