Skip to main content

பப்பாளி லட்டு செய்முறை இதோ!

Dec 25, 2023 25 views Posted By : YarlSri TV
Image

பப்பாளி லட்டு செய்முறை இதோ!  

*இந்த பண்டிககை தினத்தை சுவையான பப்பாளி லட்டொடு 

கொண்டாடி மகிழுங்கள்



*தேவையான பொருட்கள்.



* பப்பாளி – 2

* சர்க்கரை – 200 கிராம்

*நெய் – 2 டேபிள் ஸ்பூன் 

*மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

*தண்ணீர் – 2 டம்ளர் 

*ஏலக்காய் – ஒரு சிட்டிகை

* பாதாம், முந்திரி – அலங்காரத்திற்கு



 



*செய்முறை



 முதலில் பப்பாளி பழத்தின் தோலை நீக்க வேண்டும். பிறகு அதை இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பப்பாளியை கேரட் உரசுவது போல் துருவிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் துருவி வைத்திருக்கும் பப்பாளியை சேர்க்க வேண்டும். 4 நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் இருக்கட்டும். பிறகு இதை வடிகட்டியை பயன்படுத்தி தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் வடிகட்டி வைத்திருக்கும் பப்பாளியை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இரண்டு நிமிடம் கிளறிய பிறகு சர்க்கரையை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு நெய் பிரிந்து வரும் அளவு வரும் வரை கிளறிக் கொண்டு இருக்க வேண்டும்.



பிறகு ஏலக்காய் தூள் தூவி இரண்டு கிளறு கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். சிறிது சூடாக இருக்கும் பொழுது லட்டாக உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அலங்காரத்திற்கு லட்டிற்கு மேலே பாதாம் முந்திரி போன்ற ஏதாவது ஒரு பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம். சுவையான ஆரோக்கியமான பப்பாளி லட்டு தயாராகி விட்டது.

 



 


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை