Skip to main content

பாக்கிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி

Sep 15, 2023 37 views Posted By : YarlSri TV
Image

பாக்கிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி 

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி  கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது.



 இதில் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் நேற்று மோதின. 



ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் ஆட்டம்  2¼ மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் 45 ஓவராக குறைக்கப்பட்டது. 



42 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 102 ரன்கள் திரட்டி அசத்தினர். முகமது ரிஸ்வான் 86 ரன்களுடன் (73 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் பதிரானா 3 விக்கெட்டும், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 



இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுக்க வேண்டும் இதை நோக்கி ஆடிய இலங்கை அணியில் குசல் பெரேரா 17 ரன்னிலும், நிசாங்கா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு குசல் மென்டிசும், சமரவிக்ரமாவும் இணைந்து அணியை நிமிர வைத்தனர்.



ஸ்கோர் 177-ஆக உயர்ந்த போது, சமர விக்ரமா 48 ரன்னிலும், குசல் மென்டிஸ் 91 ரன்னிலும் (87 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் இப்திகர் அகமதுவின் பந்து வீச்சில் சிக்கினர். 



 இறுதி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஜமன் கான் வீசினார். இதில் முதல் 4 பந்தில் 2 ரன் மட்டுமே எடுத்த இலங்கை மதுஷன்னின் (1 ரன்) விக்கெட்டை ரன்-அவுட்டில் பறிகொடுத்தது. 5-வது பந்தில் அசலங்கா பவுண்டரி விரட்டினார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த 2 ரன்னை அசலங்கா எடுத்து திரில் வெற்றியை தேடித்தந்தார். இலங்கை அணி 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 11-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை