Skip to main content

அமெரிக்க தேர்தல் : இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் குறித்த முழு விவரம்!...

Nov 03, 2023 33 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்க தேர்தல் : இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் குறித்த முழு விவரம்!... 

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.



அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024 ஜனவரியில் துவங்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய மாஜி துணை அதிபர் மைக் பென்ஸ் திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் நவம்பர் 7ஆம் தேதி மகாண அளவில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களின் விவரம் குறித்து பார்ப்போம்.



அமெரிக்காவில் உள்ள இந்திய அமெரிக்க சமூகம் நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நாளுக்காக மிகவும் உற்சாகமாக உள்ளது, ஏனெனில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பலர் மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.



பூஜா கண்ணா



பூஜா கண்ணா ஒரு மனநல ஆலோசகர் மற்றும் சிறு வணிக உரிமையாளர். வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் மாவட்டம் லூடன் கவுண்டி மேற்பார்வையாளர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் மற்றும் இந்திய அமெரிக்கப் பெண் என்ற பெருமையை பூஜா பெறுவார். மூன்று குழந்தைகளின் தாயான கன்னா, 2011 முதல் பதவியில் இருக்கும் குடியரசுக் கட்சியின் மேற்பார்வையாளர் மேத்யூ லெட்டோர்னோவை எதிர்த்து போட்டியிடுகிறார்.



நீல் மகிஜா



பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் கேரி சட்டப் பள்ளியின் விரிவுரையாளரான நீல் மகிஜா, மாண்ட்கோமெரி மாவட்ட ஆணையர் பதவிக்கு போட்டியிடுகிறார். சுமார் 20 ஆண்டுகாலம் வழக்கறிஞராக பணியாற்றும் அவர், அரசியலில் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.



அவர் பராக் ஒபாமாவின் கீழ் வெள்ளை மாளிகையிலும். அமெரிக்க செனட்டிலும் பணியாற்றியுள்ளார். ஜனநாயகக் கட்சி மற்றும் ஹார்வர்ட் பட்டதாரியான மகிஜா மூன்று வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்.



சுஹாஸ் சுப்ரமணியம்



சுஹாஸ் சுப்ரமணியம் மாநில செனட், பதவிக்கு (மாவட்டம் 32) போட்டியிடுகிறார். அவர் வர்ஜீனியாவின் 87வது மாவட்டத்தில் பணியாற்றும் பிரதிநிதி, சிறு வணிக உரிமையாளர் மற்றும் வெள்ளை மாளிகையில் முன்னாள் தொழில்நுட்ப ஆலோசகர்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் வழக்கறிஞருமான அஷ்வினி உட்கோன்கர், பென்சில்வேனியாவின் டெலாவேர் கவுண்டியில் உள்ள மார்பிள் டவுன்ஷிப் கமிஷனர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்தியாவில் இருந்து குடியேறிய பிறகு, உத்கோன்கர் 30 ஆண்டுகளாக மார்பில் வசித்து வருகிறார்.



லோயர் மோர்லேண்ட் பள்ளி வாரிய தலைவர் பதவிக்கு சாஜி மேத்யூ போட்டியிடுகிறார். பிலடெல்பியாவில் பிறந்து வளர்ந்த மேத்யூ 22 ஆண்டுகளாக அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்து வருகிறார்.



கஹானா நகர வழக்கறிஞர் பதவிக்கு பிரியா தமிழரசன் போட்டியிடுகிறார்.

வர்ஜீனியா மருத்துவக் குழுவின் தலைவரான கண்ணன் சீனிவாசன், வர்ஜீனியா ஹவுஸ் ஆஃப் டெலிகேட்ஸ், (மாவட்டம் 26) வேட்பாளராக உள்ளார்.

சீமா தீட்சித் சுல்லி மாவட்டத்தில் ஒரு பொதுப் பள்ளி வாரிய பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் ஒரு கட்சி சார்பற்ற சுயேட்சை வேட்பாளர் ஆவார்.



மினிதா சங்வி, ஸ்கிட்மோர் கல்லூரியில் இணைப் பேராசிரியை மற்றும் மும்பையைச் சேர்ந்த நர்சி முன்ஜி பட்டதாரி, நியூயார்க்கில் உள்ள சரடோகா ஸ்பிரிங்ஸில் நிதி ஆணையராக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.



ஜனநாயகக் கட்சியைச சேர்ந்த வின் கோபால், நியூ ஜெர்சி மாநில செனட் (மாவட்டம் 11) வேட்பாளராக உள்ளார். புளோரிடா ஹவுஸ் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரிஷி பாக்கா போட்டியிடுகிறார். அவர் ஒரு மோட்டல் வணிகத்திற்கு சொந்தக்காரர். உரிமம் பெற்ற அரசு வழக்கறிஞர் ஆவார்.



மாவட்ட ஆணையர் பதவிக்கு பல்வீர் சிங் போட்டியிடுகிறார். 2017 ஆம் ஆண்டில் நியூ ஜெர்சியில் உள்ள மாவட்ட அளவிலான அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை