Skip to main content

தேரர் ஒருவர் படுகொலை செய்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு !

Mar 12, 2024 23 views Posted By : YarlSri TV
Image

தேரர் ஒருவர் படுகொலை செய்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ! 

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் இது  தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.



ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 



இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் நேற்று (11)  ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 



இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபர்  நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.



இதன்போது, சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர்   உயிரிழந்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

23 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

23 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

23 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

23 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

23 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

23 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை