Skip to main content

சீன ஆராய்ச்சிக் கப்பல் குறித்து இந்தியாவிடம் இலங்கை தெரிவித்துள்ள விடயம் வெளியாகியுள்ள தகவல்..!

Jan 01, 2024 27 views Posted By : YarlSri TV
Image

சீன ஆராய்ச்சிக் கப்பல் குறித்து இந்தியாவிடம் இலங்கை தெரிவித்துள்ள விடயம் வெளியாகியுள்ள தகவல்..! 

ந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும், தமது துறைமுகங்களில் நங்கூரமிடவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் செயற்படவோ, எதிர்வரும் ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப் போவதில்லை என இலங்கை, இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மதிப்பளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 



இதன்படி சீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong 3 தென் இந்தியப் பெருங்கடலில் ஆழமான நீர் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.



அறிவிக்கப்பட்டுள்ள இந்த தடை கடந்த வாரம் உயர்மட்ட இராஜதந்திர தரப்புக்கள் மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி 2024 ஜனவரி 5 முதல் 2024 மே இறுதி வரை தென் இந்தியப் பெருங்கடலில் "ஆழ்ந்த நீர் ஆய்வு" நடத்த திட்டமிடப்பட்ட சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான Xiang Yang Hong 3க்கு இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படாது.



இதேவேளை இந்த கப்பல் ஆய்வுக்கு அனுமதிக்குமாறு மாலைத்தீவிடமும் சீனா கோரிக்கையை முன்வைத்திருந்தது. எனினும் இது தொடர்பில் மாலைத்தீவின் பதில் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை