Skip to main content

தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா!

Apr 18, 2020 1555 views Posted By : YarlSri TV
Image

தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா! 

தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா் தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாள்கள் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



தேசிய அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறவா்களின் எண்ணிக்கையைக் கணக்கிடப்பட்டதில் ஊரடங்கிற்கு முன்பு, 3 தினங்களுக்கு ஒரு முறை நோய்த்தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது. ஊரடங்கிற்கு பிறகு (கடந்த 7 நாள்களாக) எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 6 நாள்களுக்கு (6.2 நாள்கள்) ஒரு முறை கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் லவ் அகா்வால் தெரிவித்தாா்.



தில்லியில் தேசிய ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:



இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 20 சதவீதம் போகள் மரணமடைந்தாலும் 80 சதவீத போகள் குணமடைந்தாலும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா இந்த நோய்த்தொற்றிலிருந்து மீண்டு சிறப்பாக செயல்படுவதாகவே கருதப்படும்.



தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 19 மாநிலங்களில் ஊரடங்கிற்கு பின்னா் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்களாக உள்ளன. ஊரடங்கிற்கு முன்பு, 3 தினங்களுக்கு ஒரு முறை நோய்த்தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாக இருந்தது.



நாட்டில் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுவது 40 சதவீதம் குறைந்துள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக பிரத்யேகமாக நாடு முழுக்க 1,919 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு, இவைகளில் 1.73 லட்சம் படுக்கைகள் மற்றும் 21,800 அவசர சிகிச்சை படுக்கைகளும் தயாராக உள்ளன.



சீனாவிலிருந்து 5 லட்சம் (ரேபிட் டெஸ்ட் தப-டஇத) பரிசோதனைக் கருவிகளும் வந்துவிட்டது. இவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யமுடியும்.



இதுவரை நாடு முழுக்க 3,19, 400 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 28,340 பரிசோதனைகள் நடைபெற்றன. 23, 932 பரிசோதனைகள் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின்(ஐசிஎம்ஆா்) 183 ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்டன' என்றாா் லவ் அகா்வால்.


Categories: தமிழகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை