Skip to main content

20ம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு!

Apr 17, 2020 1653 views Posted By : YarlSri TV
Image

20ம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு! 

தமிழகத்தில், வரும், 20க்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின் ஊரடங்கை, எப்படி படிப்படியாக தளர்த்தலாம் என, அரசுக்கு அறிக்கை அளிக்க, நிதித்துறை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.



கொரோனா நோயால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கப்படுமா என, முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த முதல்வர், பழனிசாமி”இது பணக்காரர்களுக்கு வந்த நோய்; வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட நோய். இந்த நோய் ஏழைகளுக்கு வரவில்லை. ”ஏழைகளாக இருந்தால் பேசலாம். பணக்காரர்களை கண்டால் பயமாக இருக்கிறது. வெளிநாட்டிற்கு சென்று, நோயை இறக்குமதி செய்துள்ளனர். ”தமிழகத்தில் நோய் உருவாகவில்லை,” என, தெரிவித்தார்.



இந்தியாவில் உள்ள, 325 மாவட்டங்கள், கொரோனா பாதிப்பில்லாதவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன; ஆனாலும், நாடு முழுதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது; பலி எண்ணிக்கையும், 414 ஆக அதிகரித்துள்ளது’ என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம், 720 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், 325 மாவட்டங்களில், ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம், 325 மாவட்டங்கள், கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த, 1,488 பேர், முழுமையாக குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Categories: தமிழகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை