Skip to main content

இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதி செயலாளர் ராஜீவ் குமார் இன்று இந்திய தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்!

Sep 01, 2020 228 views Posted By : YarlSri TV
Image

இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதி செயலாளர் ராஜீவ் குமார் இன்று இந்திய தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்! 

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அசோக் லவாசா. இவரது பதவிக் காலம் இன்னும் 2 ஆண்டுகள் இருந்தன. ஆனால் அசோக் லவாசா கடந்த மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.



இதைத்தொடர்ந்து, அந்த புதிய பதவியை ஏற்பதற்காக அசோக் லவாசா தேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ள அவர், நேற்றுடன் தன்னை பதவியில் இருந்த விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.



இதனைத் தொடர்ந்து முன்னாள் நிதி செயலாளர் ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை