Skip to main content

தங்கச் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழப்பு?

Sep 12, 2020 268 views Posted By : YarlSri TV
Image

தங்கச் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழப்பு? 

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கில் உள்ள கமிட்டுகா அருகே நேற்று பிற்பகல் ஒரு  தங்கச் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.



கடும் மழையைத் தொடர்ந்து காங்கோ 'டெட்ராய்ட்' என்ற தங்க சுரங்கத்தில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது.



இதில் அங்கு வேலை பார்த்த பல சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கி கொண்டனர்.  யாரும் வெளியேற முடியவில்லை. 



இதில்50 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது



சுரங்க விபத்துக்கள் காங்கோவில் ஒழுங்குபடுத்தப்படுத்தப்பட வில்லை.  ஒவ்வொரு ஆண்டும் சுரங்க விபத்துக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகிறார்கள். 



பயன்படுத்தப்படாத தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 16 பேர் பலியானார்கள் அதே நேரத்தில் 2019 ஜூன் மாதம் ஒரு செப்பு மற்றும் கோபால்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 43 சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை