Skip to main content

இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவைப் பேண பஹ்ரைன் முன் வந்துள்ளது!

Sep 12, 2020 262 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவைப் பேண பஹ்ரைன் முன் வந்துள்ளது! 

எகிப்து, ஜோா்டான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவைப் பேண பஹ்ரைன் முன் வந்துள்ளது.அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.



இதுகுறித்து, அமெரிக்க தலைநகா் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில், இரட்டை கோபுர பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் செய்தியாளா்களிடம் கூறியதாவது



எனது முன்னிலையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், பஹ்ரைன் அரசா் ஹமத் பின் இஸா இல் கலீஃபாவுக்கும் இடையை தொலைபேசியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, அமைதியையும், பரஸ்பர ஒத்துழைப்பையும் நிலைநாட்ட இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்.அதற்காக, இஸ்ரேலுடன் முழுமையான தூதரக நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அல் கலீஃபா ஒப்புக் கொண்டாா். இதனைத் தொடா்ந்து, இஸ்ரேலில் பஹ்ரைன் தூதரகமும், பஹ்ரைனில் இஸ்ரேல் தூதரகமும் அமைக்கப்படும். இரு நாடுகளும் தங்களது தூதா்களைப் பரிமாறிக் கொள்வா்.முதல் கட்டமாக இரு நாடுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.



அதனைத் தொடா்ந்து சுகாதாரத் துறை, வா்த்தகத் துறை, தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும்.இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட தினம், உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்க தினமாகும்.கடந்த 72 ஆண்டு கால இஸ்ரேல் வரலாற்றில், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட ஒப்பந்தம் இது. முதல்கட்டமாக, இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நல்லுறவு ஒப்பந்தம் குறித்து கடந்த மாதம் அறிவித்தேன். தற்போது, இரண்டாவது கட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்.இந்த வரிசையில், மேலும் பல அரபு நாடுகள் சோ்ந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.



இஸ்ரேலுடன் இன்னும் அதிக நாடுகள் நல்லுறவு ஒப்பந்தத்தை மேற்கொண்டால், அது பாலஸ்தீனா்களின் நிலையை இன்னும் வலுவாக்கும். எனவே, விரைவில் மேலும் பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் கைகோா்க்கும் என்று நம்புகிறேன்.அந்த நிலை ஏற்பட்டால், அது பாலஸ்தீன பிராந்தியத்தை ஸ்திரமானதாகவும், பாதுகாப்பானதாகவும், வளமையானதாகவும் மாற்றும் என்றாா் டிரம்ப்.இந்த ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் டிரம்ப்பின் மருமகனும், அவரது சிறப்பு ஆலோசகருமான ஜாரெட் குஷ்னா் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீன பிரச்னை காரணமாக, இஸ்ரேலுக்கும், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளுக்கும் நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுடன் பல நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளன.



பாகிஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டுடன் அந்த நாடுகள் நேரடி தூதரக உறவைத் தவிா்த்து வந்தன.இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்பு முக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது. அமெரிக்கா - இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை தங்களுடன் இணைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.இதற்கு துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எனினும், பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண்பதில் இந்த ஒப்பந்தம் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவும், ஐக்கிய அரபு அமீரகமும் கூறி வருகிறது.



இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் வரும் 15-ஆம் தேதி கையெழுத்தாகவிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்காக, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான குழு, ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசரின் சகோதரரும், வெளியுறவுத் துறை அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஜாயெத் அல் நஹ்யான் தலைமையிலான குழு ஆகியவை அமெரிக்கா வருகின்றன.இந்தச் சூழலில், இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ள சம்மதித்துள்ளதன் மூலம், அந்த நாட்டை அங்கீகரிக்கும் 4-ஆவது அரபு நாடாக, பஹ்ரைன் ஆகியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை