Skip to main content

ஆந்திராவில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

Oct 08, 2020 282 views Posted By : YarlSri TV
Image

ஆந்திராவில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! 

ஆந்திராவில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது



ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்கள் 43 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



அதில் பள்ளி மாணவர்களுக்கான 3 செட் சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பள்ளி பை, காலணிகள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதற்காக ரூ. 650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.



பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் , அரசு உதவியில் இயங்கும் பள்ளிகளுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்புக்குப் பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது . முன்னதாக குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோருக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை, ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே வரும் திட்டம், சட்டவிரோதமான மதுபானக் கடைகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து அசத்தி வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி .


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை