Skip to main content

நேபாளத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது!

Oct 10, 2020 265 views Posted By : YarlSri TV
Image

நேபாளத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது! 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3.70 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில், நேபாளத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக நேபாள நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நேபாளத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.



கொரோனாவுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை