Skip to main content

ட்ரம்பின் தோல்வியைப் பயன்படுத்தி டிக்டாக் நிறுவனம் செய்த வேலை!

Nov 12, 2020 252 views Posted By : YarlSri TV
Image

ட்ரம்பின் தோல்வியைப் பயன்படுத்தி டிக்டாக் நிறுவனம் செய்த வேலை! 

ட்ரம்பின் தோல்வியைப் பயன்படுத்தி டிக்டாக் நிறுவனம் செய்த வேலையைப் பார்க்கும்முன், ஏன் டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது என்பதைப் பார்ப்போம்.



டிக்டாக் நிறுவனம், வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்களை சீனா நாட்டில் உள்ள ஒரு முக்கிய நிறுவனத்திற்கு தருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது பைட் டான்ஸ் நிறுவனம். ஆயினும் செப்டம்பர் 20-ம் தேதியோடு அமெரிக்காவில் டிக்டாக் தடை எனும் செய்தி பரவியது. டிக்டாக் தடைக்கு எதிராக அந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.



டிக்டாக்கை தடை செய்ய வைப்பதில் ட்ரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டினார். அதனால், அவர் தற்போது அதிகாரம் இழந்திருக்கும் நேரம் என்பதால், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவின் முதன்மை நீதிமன்றம் தலையிட்டு எங்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்’ என புது டுவிஸ்ட் அடித்துள்ளது.



டிக்டாக் நிறுவனம் இதைத் தொடங்கி வைத்திருக்கிறது. ட்ரம்பால் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி ஒவ்வொருவராக இப்படி நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை