யாழ் நகரில் முனீஸ்வரன் வீதி மாநகரசபையால் மூடப்பட்டமைக்குஎதிர்ப்பு!
Nov 21, 2020 219 views Posted By : YarlSri TV
யாழ் நகரில் முனீஸ்வரன் வீதி மாநகரசபையால் மூடப்பட்டமைக்குஎதிர்ப்பு!
யாழ் நகரில் ஆஸ்பத்திரி வீதி யினையும் பிரதான வீதியையும்இணைக்கும் முனீஸ்வரன் வீதி கடந்த 4 நாட்களாக யாழ்ப்பாண மாநகர சபையினால் வாகனங்கள்உட் பிரவேசிக்காத வகையில் மூடப்பட்டு காணப்படுகின்றது மூடப்பட்டதன் காரணமாக முனீஸ்வரன் வீதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக முனீஸ்வரன் வீதி வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்
இன்று அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர் .
முனீஸ்வரன் வீதியில் 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன புடவைகடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பாட்டா கடைகள் காணப்படுகின்றன.
குறித்த கடைகளில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர் எனினும் யாழ்ப்பாண மாநகர சபையானது கடந்த 4 நாட்களாக குறித்த வீதியினை யா ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பிக்கும் இடத்தில் வீதிமறியல் போட்டு மூடியுள்ளார்கள்
எனவே எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக உலக வங்கியினால் குறித்த வீதியானது அபிவிருத்திசெய்யப்படுகின்ற வேளையிலும் நமக்கு தெரிவிக்கப்பட்டது அந்த வீதியானது ஒரு வழிப்பாதையாக பயணிக்க அனுமதிக்கப்படும் என எனினும் தற்போது யாழ்ப்பாண மாநகர சபையானது எந்தவித முன்னறிவிப்புமின்றி குறித்த வீதியை மூடியுள்ளதன் காரணமாக நமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவே இந்த விடயத்தினை மாநகர முதல்வர் கவனத்தில் எடுத்து குறித்த வீதியினை மக்கள் பாவனைக்காக திறந்து விடவேண்டும் அத்தோடு அதனை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago