Skip to main content

ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் பிரதமரினால் திறந்து வைப்பு

Dec 22, 2020 266 views Posted By : YarlSri TV
Image

ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் பிரதமரினால் திறந்து வைப்பு 

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.



அதற்கமைய ஜேதவனாராம வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட தனித்துவமான புராதன பொருட்கள்  நேற்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.



அருங்காட்சியக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர், ஜேதவனாராமய விகாரை பூமியில் நாக மரக் கன்றொன்றை நாட்டி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம், பிரதமரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.



மத்திய கலாசார நிதியத்தின் 50 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு இணையாக புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக சாலை அமைப்பிற்கு 82 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.



தொல்பொருள் மதிப்புமிக்க இடிபாடுகள் மற்றும் புதைபடிவங்களை பாதுகாக்கும் செயற்பாடு ஜேதவன தொல்பொருள் அருங்காட்சியகத்தினூடாக முன்னெடுக்கப்படுவதுடன் அது இலங்கை கலைஞர்களினால் நிர்மாணிக்கப்பட்ட பெருமை மிக்க படைப்பாகும்.



பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று மதிப்புமிக்க திட்டம் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இலங்கையின் மகிமையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கில் செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை