Skip to main content

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சி – ஐக்கியதேசிய கட்சி கடும் கண்டனம்

Feb 01, 2021 260 views Posted By : YarlSri TV
Image

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சி – ஐக்கியதேசிய கட்சி கடும் கண்டனம் 

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக்கியதேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டு;ள்ளது.

2011ம் ஆண்டின் ஜனநாயக சீர்திருத்தங்கள் 2015 தேர்தல்களுடன் மியன்மாரில் ஆரம்பித்தன என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சி 2020 நவம்பரில் இடம்பெற்ற தேர்தல் ஜனநாயக சீர்திருத்தங்களின் இரண்டாம் கட்டம் என வர்ணித்துள்ளது.

மியன்மாரில் காணப்பட்ட முன்னேற்றங்களுக்கு இராணுவத்தின் நடவடிக்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பெருமளவு மக்கள் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கிற்கு தங்கள் ஆதரவை வழங்கினார்கள் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.



தேர்தலில் வெற்றிபெற்ற மியன்மார் நாடாளுமன்றம் பதவியேற்றிருந்தால் அது சீர்திருத்த நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக அமைந்திருக்கும் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள ஐக்கியதேசிய கட்சி அவர்களை இராணுவம் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை