Skip to main content

ஐ.நா. வாக்கெடுப்பு இந்தியாவிற்கு இலங்கை நன்றி.

Apr 23, 2021 166 views Posted By : YarlSri TV
Image

ஐ.நா. வாக்கெடுப்பு இந்தியாவிற்கு இலங்கை நன்றி. 

இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி அந்நாட்டின் மீதான சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் பிரிட்டன் கொண்டு வந்தது. அதேபோல், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன.



இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல முக்கிய தமிழ் அரசியல்வாதிகளும் வலியுறுத்தினர். ஆனாலும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இதையடுத்து இந்த தீர்மான வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. பிரேசில், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. இந்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.





இந்த நிலையில், ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியாவிற்கு இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. ஐ.நா வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி என்றும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து இலங்கை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை