Skip to main content

அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் கழிவுப் பொருட்கள் மக்கள் எதிர்ப்பு!

Jul 04, 2021 207 views Posted By : YarlSri TV
Image

அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் கழிவுப் பொருட்கள் மக்கள் எதிர்ப்பு! 

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளர்.



நல்லூர் பிரதேச சபைபின் ஆளுகைக்குட்பட்ட  காரைமுனங்கு மயானத்தில் பிரதேச சபையினால்  பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.



நல்லூர் பிரதேச சபையினால் மயானங்களை அழகுபடுத்துவதாக கூறி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.



குறித்த பிரச்சினை தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால்  மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளர்.

இவ்வாறு மயானங்களில் கழிவுப் பொருட்களைக் கொட்டுவதற்கு பிரதேச சபை அமர்வுகளில் அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த இடத்திற்கு வருகைதந்த நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் வாசுகி சுதாகரன் தெரிவித்திருந்தார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை