Skip to main content

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

Oct 03, 2022 75 views Posted By : YarlSri TV
Image

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா! 

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.



இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள இந்தியா அணி தொடரையும் வென்றது.



குவாஹாத்தியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், மஹாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



இதனைத்தொடர்ந்து 238 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இந்திய அணி சார்பில், 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை