Skip to main content

ஒருபோதும் மறக்கவோ , மன்னிக்கவோ மாட்டோம்; அனைவருக்கும் பாடம் கற்பிப்போம்; உக்ரைன் அதிபர் உறுதி

Mar 07, 2022 81 views Posted By : YarlSri TV
Image

ஒருபோதும் மறக்கவோ , மன்னிக்கவோ மாட்டோம்; அனைவருக்கும் பாடம் கற்பிப்போம்; உக்ரைன் அதிபர் உறுதி 

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற தொடங்கியுள்ள நிலையில், போரில் பெண்கள், குழந்தைகளை கொன்றவர்களை "மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்" என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)  உறுதி பட கூறியுள்ளார்.



ரஷ்யாவில் மிலேச்சத்தனமாக தாக்குதலில் 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கமிஷனர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.



இந்தநிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்றவர்களை நாங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டோம் என உக்ரைன் அதிபர் (Volodymyr Zelenskyy)  கவலை வெளியிட்டுள்ளார்.



எங்களது மண்னில் இந்த போரில் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிப்போம் என்றும் , இந்த பூமியில் கல்லறையத்தவிர அமைதியான இடம் இல்லை எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  கூறியுள்ளார்.



இந்த போரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்ற போரில் "அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்ப்போம் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelenskyy)  உறுதியளித்துள்ளார்.



கார்கீவ் நகரில் உள்ள அணு உலையை தகர்த்து ரஷியா மீது பழிபோட உக்ரைன் பாதுகாப்பு படை திட்டமிடுவதாக ரஷிய குற்றம் சுமத்தி உள்ளது.



அதேசமயம் உக்ரைனில் சண்டையிட சிரியாவைச்சேர்ந்தவர்களை ரஷிய ராணுவம் தேர்வு செய்வதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை