Skip to main content

குரங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறை விடுத்துள்ள விஷேட அறிவித்தல்..!!

Feb 25, 2024 50 views Posted By : YarlSri TV
Image

குரங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறை விடுத்துள்ள விஷேட அறிவித்தல்..!! 

கர்நாடக எல்லை பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கா்நாடகத்தில் அதிகரித்து வருகிறது.

குரங்கு காய்ச்சல்  நோய்க்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.



103 பேர் சிவமோகா, உத்தர கன்னடா மற்றும் சிக்மங்களூரு மாவட்டங்களில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் .



இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம்  இணைந்து நடத்திய ஆய்வில் தமிழக எல்லையான கர்நாடகாத்தின் மைசூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் கொடிய வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.



அண்டை மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக-கர்நாடக எல்லையில் மாநில சுகாதார மற்றும் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை