Skip to main content

10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய மிக மோசமான புழுதிப்புயல்!

Mar 16, 2021 204 views Posted By : YarlSri TV
Image

10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய மிக மோசமான புழுதிப்புயல்! 

சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் புழுதிப் புயல் வீசியது. இதனால் தலைநகர் முழுவதிலும் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் புழுதி படித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்ஜிங் நகரில் மோசமான புழுதிப் புயல் தாக்கியுள்ளது.



இதன் காரணமாக பெய்ஜிங்கிலுள்ள இரண்டு விமான நிலையங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு பாலைவனங்களில் இருந்து மணல் கிழக்கு நோக்கி வீசும் என்பதால் வசந்த காலங்களில் இதுபோன்ற புயல்கள் வழக்கமாக ஏற்படும்.



புழுதிப் புயல்கள் ஏற்படுவதைத் தடுக்க சீனா நகரம் முழுவதும் அந்நாட்டு அரசு மரங்களை நட்டு வருகிறது. இருப்பினும், நகர் விரிவாக்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயலைச் சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.



தற்போது ஏற்பட்டுள்ள புழுதிப் புயல் 12 மாகாணங்களைப் பாதிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட புழுதிப் புயலில் இது மோசமானது என சீனா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



ஏற்கனவே பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தற்போது புழுதிப் புயலும் ஏற்பட்டுள்ளதால் காற்றின் தரம் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை