Skip to main content

இத்தாலிக்கான சிறிலங்கா தூதர் நியமனத்தில் இழுபறி!

Sep 07, 2021 156 views Posted By : YarlSri TV
Image

இத்தாலிக்கான சிறிலங்கா தூதர் நியமனத்தில் இழுபறி! 

இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயசை ஏற்பதா இல்லையா என்பது குறித்து இத்தாலி அரசாங்கம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



முன்னதாக கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் போர்க் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து சுமங்கல டயஸின் நியமனத்தை கனேடிய அரசாங்கம் நிராகரித்திருந்ததது. விமானப்படை முன்னாள் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தற்போதைய இராணுவத் தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா வன்னிப் போரில் தலைமை வகித்த 57,58, 59ஆவது படையணிகளுக்கு விமானப்படை தாக்குதல் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்.



இறுதிப் போரில் விமானப்படையின் பதில் தளபதியாக செயற்பட்ட அவர், விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் மீது போர்க் குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அரச படையினரின் முன்னணி பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றார்.



இந்த நிலையில் எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், தற்போதைய கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தினால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட போதிலும் போர்க் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அவரின் நியமனத்தை கனேடிய அரசாங்கம் நிராகரித்திருந்தது.



அதனையடுத்தே எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் இத்தாலிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். எனினும் அவரது நியமனம் குறித்து இத்தாலிய அரசாங்கம் கடந்த 05 மாதங்கள் கடந்தும் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இத்தாலித் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



பெரும்பாலும் இத்தாலி அரசாங்கத்தினாலும் அவரது நியமனம் நிராகரிக்கப்படலாம் என்று கூறப்படுகின்ற போதிலும் எதிர்வரும் வாரம் இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்நாட்டுப் பிரதமருடனான சந்திப்பின்போது இதுகுறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை